சர்தார் 2 திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்திரைப்படத்தில் கார்த்தியுடன் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.