போர்ச்சுக்கலின் கார் ரேசிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நடிகர் அஜித்குமார், 232 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரேசிங் குழுவுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ மற்றும் அதிவேகத்தில் காரை ஓட்டிச் செல்லும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.