news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்
tv

Also Watch

tv

Read this

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு...

Posted on: Mar 26, 2026 12:26 PM

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாமக தேர்தல் அறிக்கையில், குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் 2026 வாக்குறுதிகள்
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ், பாமக கட்சியின் 2026ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்;

* ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை யோகா வகுப்புகள் நடத்தப்படும்
* சேர்க்கை கட்டணமும், தேர்வு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது
* 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்

* மாநில தனித்தன்மைக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசு கல்வி மற்றும் பாடத் திட்டங்களை வடிவமைப்பது அவசியம்
* குடும்ப சூழ்நிலையால் இடைநிற்றலை தடுக்க 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும்

* பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும்
* மாவட்டத்திற்கு ஒரு வேளாண் கல்லூரி துவக்கப்படும்
* மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி துவக்கப்படும்

* தமிழ்நாட்டில் 4 இடங்களில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி துவக்கப்படும்
* உயர்கல்வி பெற 2 லட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ள நலிந்த குடும்ப
மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்
* ஐஐடி, ஐஐஎம், ஐஏஎஸ், ஐஆர்எஸ் போன்ற தேர்வுகளுக்கு தயாராக
மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி மையம் துவக்கப்படும்

* உயர்கல்வியான மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பொறியியல், பல் மருத்துவ படிப்புக்கு, வங்கியில் கடன் பெற்று பயின்றவர்களின் கடன் தொகையை அரசே செலுத்தும்

* விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்தும், நுகர்வோருக்கு அடக்க விலையில் உணவு பொருள் கிடைக்க செய்தும் இடைத்தரர்களின் இடையூறுகள் கட்டுபடுத்தப்படும்

* கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயும், நெல் குவிண்டாலுக்கு 3,000 ரூபாயும் ஆதார விலை நிர்ணயிக்கப்படும்
* வேளாண் தொழிலாளர்களுக்கு மாதம் 3,000 ஊக்கதொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் 2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்
* விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற குறுகிய கால கடன் நடுத்தர கால கடன், நீண்ட கால கடன் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்
* தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு குறு விவசாயிகள் விவசாயத்திற்காக பெற்ற கடன்கள் தள்ளூபடி செய்யப்படும்

* தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்
* மத்திய அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

* மதுவை ஒழிக்க ஒரு சொட்டு மது இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவது பாட்டாளி மக்கள் கட்சியின்
லட்சியம்

* தொழில் தொடங்க ஒற்றைச்சாளர முறை விரைவாக செயல்படுத்தப்படும்
* 38 மாவட்டங்களிலும் ஐடி தொழில் நிறுவனம் உருவாக்கப்படும்

* முதியோர், ஆதரவற்றோர், கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.3,000 வழங்கப்படும்

* 60 வயது முதியவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்

* குடும்ப அட்டைதார குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.3,000 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்

* மகளிர் சுய உதவிக்குழு பெற்ற கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்

* மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும்

* காவல்துறையினருக்கு 8 மணி நேரம் பணி என்பது கட்டாயமாக்கப்படும்

* புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை தொடங்கப்படும்

* புதுச்சேரியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்

* புதுச்சேரியில், மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.3,000 வழங்கப்படும்

இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Link

"மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி"



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பொன்ராஜ் மீது DGP ஆபீசில் விஜய் பரபரப்பு புகார்

0
2 mins agoshare
Sengottaynbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved