news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெரிய கூட்டணி போல் மாயை ஏற்படுத்தும் அதிமுக
tv

Also Watch

tv

Read this

பெரிய கூட்டணி போல் மாயை ஏற்படுத்தும் அதிமுக

தூத்துக்குடி

Posted on: Mar 26, 2026 02:57 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister geetha jeevan

மாயை ஏற்படுத்தும் அதிமுக :

தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசினார் அப்போது எடப்பாடி
பழனிச்சாமி 2021 ஆம் ஆண்டு அதிமுக, இதே பாஜக, இதே பாமக ஆகிய கட்சிகள் இணைந்து தான் தேர்தலை சந்தித்தனர்.

ஆனால் 2021 இல் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. இப்போது நமது முதல்வர் வலிமையான பலமான கூட்டணி அமைத்துள்ளார் புதிதாக நமது கூட்டணியில் தேமுதிக வந்துள்ளது. மேலும் பல கட்சிகளும் வந்துள்ளது நமது கூட்டணி இப்போது வலிமை பெற்ற கூட்டணியாக இருக்கிறது.

நாம் கவனமாக உழைக்க வேண்டும் ஏனென்றால் நமது எதிராளி நம்மிடையே கூட குழப்பத்தை உண்டாக்குவார்கள். மதக் கலவரம், ஜாதி கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால் எல்லாமே தவிடுபொடியாக்கிவிட்டது  நம்மளுடைய முதல்வரின் செயல்பாட்டால். தமிழ்நாட்டில் ஐந்து வருடமாக எந்தவித கலவரமும் இல்லை.

குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்று நினைத்தனர் இருந்த போதும் அவர்களுக்கு தோல்விதான். இப்போது நாங்களும் பெரிய கூட்டணி தான் என்ற ஒரு மாயை உருவாக்கிக் கொண்டு தேர்தலை சந்திக்க வருகின்றனர் என்றார்.

Related Link
கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வீதி உலா

கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் வீதி உலா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பொன்ராஜ் மீது DGP ஆபீசில் விஜய் பரபரப்பு புகார்

1
2 hrs 13 mins agoshare
Sengottaynbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved