ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் டீஸர், வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. தீபாவளி வாழ்த்துகளுடன் மாஸ் லுக்கில் ராம் சரணின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, டீசர் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.