மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் தலித் ஒருவரின் வீட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உணவருந்தினார். விவசாயி அஜய் துக்காராம் சனதே இல்லத்திற்கு சென்ற ராகுல் காந்தி, பட்டியலினத்தவரின் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து அவருடன் இணைந்து சமையல் வேலைகளில் உதவி செய்ததோடு, ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ந்தார். இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, பட்டியலினத்தவர்களுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள உரிமைகளை பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளார்.