பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இணைய மாயாவதி மறுத்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், பகுஜன் சமாஜ் மீது காங்கிரஸ் எப்போதும் பகைமை கொண்டிருப்பதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். ரேபரேலி தொகுதியில் பட்டியலின மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, இப்போதெல்லாம் மாயாவதி தேர்தலில் போட்டியிடாதது ஏன் என வினவினார்.