ஷம்பு எல்லைக்கு செல்லவிருந்த பஞ்சாப் விவசாயிகளை மொகாலியில் பேரிகார்டுகளை அமைத்து போலீசார் தடுத்ததால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஷம்பு எல்லைக்கு விவசாயிகள் செல்ல முயன்ற போது, போலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்து மோதலில் ஈடுபட்ட விவசாயிகள், வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.