கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் பாதுகாப்புக்கு தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குஜராத் மாநிலத்தில் பெண்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அவர், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வரை விதிக்கும் வகையில், சட்டங்களை தமது அரசு திருத்தியதாக கூறினார்.