வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, மோடிக்கு தனது புத்தகத்தை பரிசாக வழங்கி அதில் கையெழுத்திட்டு மகிழ்ந்த டிரம்ப், புதிய அரசாங்கத்தின் அதிகாரிகள் அனைவரையும் மோடிக்கு அறிமுகம் செய்துவைத்தார்.