அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உள்ளூர் நேரப்பட்டி மதியம் 12:37 மணிக்கு அலஸ்காவில் 7.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. Sand Point என்ற பகுதியின் தெற்கே சுமார் 87 கிலோ மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து அம்மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கடற்கரை பகுதி அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.