கேமரா கோளாறு காரணமாக, அமெரிக்காவில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் கார்களை Porsche நிறுவனம் திரும்பப் பெறுகிறது. Cayenne, Cayenne E-Hybrid, Taycan, Panamera, Panamera E-Hybrid model கார்களை ரிவர்ஸ் எடுக்கும் போது பயன்படும் சென்சார் கேமரா சரிவர செயல்படாததால், திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு, ஹெட்லைட் சரிசெய்தல் தொடர்பாக 2 .22 லட்சம் கார்களை அந்நிறுவனம் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.