காலில் அடிபட்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, பிரதமர் மோடி அளித்த விருந்தில், கலந்து கொண்டு இளம் கிரிக்கெட் வீராங்கனை பிரதிகா ராவலுக்கு, பிரதமர் மோடி, உணவு எடுத்து வந்து கொடுத்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த வேளையில், தொடக்க ஆட்டக்காரராக ரன் குவித்து அசத்தியவர் பிரதிகா ராவல். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் இளம் வீராங்கனை ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.