Also Watch
Read this
சென்னையில் PLAN.! கூகுள் மேப் தான் KEY.!.. கண்டெய்னர் கும்பலின் அதிர்ச்சி பின்னணி.!
கூகுள் மேப் தான் KEY.
Updated: Sep 29, 2024 01:07 PM
SBI ATM மையங்களை மட்டும் குறி வைத்து கொள்ளையடித்து வந்த ஹரியானா கண்டெய்னர் கொள்ளையர்கள், கொள்ளைக்கு முன்பு சென்னையில் வைத்து திட்டம் தீட்டியது அம்பலமாகி
உள்ளது.
துப்பு கொடுப்பது, உளவு பார்ப்பது, ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது என கொள்ளை கும்பலில் 40-க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படும் நிலையில், கொள்ளை கும்பலின் முக்கிய தலையை பிடிக்க ஹரியானா விரைந்துள்ளது தனிப்படை...!
கேரள மாநிலம் திரிச்சூரில் அடுத்தடுத்து மூன்று ATM மையங்களில் சுமார் 66 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்த ஹரியானா கண்டெய்னர் கொள்ளை கும்பல், தமிழகத்திற்குள் புகுந்தது. நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே சன்னியாசிபட்டி என்ற இடத்தில் வைத்து கண்டெய்னர் கொள்ளை கும்பலை போலீஸ் மடக்கி பிடித்தது. கொள்ளை கும்பலின் ஒருவன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், ஒருவனை காலிலேயே சுட்டுப் பிடித்தது காவல்துறை...
இன்னும் ஐந்து பேரை கைது செய்த போலீசார், விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில், கொள்ளை கும்பல் சென்னையில் வைத்து தான் கொள்ளைக்கு திட்டமே தீட்டி இருக்கிறது. SBI ஏ.டி.எம்.மையங்களை கூகுள் மேப் மூலம் கண்டறிந்து கொள்ளும் கொள்ளை கும்பல், அதிலேயே அக்கம் பக்கத்தில் இருக்கும் இடத்தையும் அலசி ஆராய்கிறது. பெருமளவு ஆள் நடமாட்டம் இல்லாத ஏ.டி.எம். மையத்தையே தேர்வு செய்யும் கொள்ளை கும்பல், அந்த ஏ.டி.எம்.மையத்திற்கு எப்படியெல்லாம் செல்ல வேண்டும்? கொள்ளையடித்துவிட்டு எப்படி தப்பிவர வேண்டும் என்பதை சென்னையில் வைத்து தான் பிளான் பண்ணியிருக்கிறது.
25-ந் தேதி சென்னையில் வைத்து சந்தித்துக் கொண்ட இந்த கும்பல், 26-ந் தேதி திரிச்சூருக்கு
சென்றிருக்கிறது.
27-ந் தேதி அதிகாலை திரிச்சூரில் இருந்து மீண்டும் தமிழகத்திற்குள் புகுந்த கும்பல், இங்கேயும் கொள்ளையடிக்க திட்டம் வைத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது. அதோடு, நாமக்கலுக்கு வந்த கொள்ளை கும்பல், எந்த சோதனை சாவடியிலும் நிற்காமல் வரிசையாக விபத்து ஏற்படுத்திய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரியை போலீசார் பின்னாடியே துரத்திச் செல்லும் காட்சிகளும், போலீசாருக்கு பயந்து என்ன செய்வது என தெரியாமல் வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக அந்த கண்டெய்னர் லாரி மோதிய காட்சிகளும் அந்த சிசிடிவிக்களில் பதிவாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved