உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை அடர்த்தியான பனிமூட்டமும், கடும் குளிரும் நிலவிய போதும், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.