ரங் பஞ்சமியையொட்டி மத்தியப் பிரதேசம் இந்தூரில் லட்சக்கணக்கான மக்கள்,தெருக்களில் திரண்டு வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடினர். ஹோலி பண்டிகைக்கு பிறகு 5 ஆவது நாள் வரும் ரங் பஞ்சமி, வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், மத்தியப் பிரதேசம் இந்தூரில் வெகு பிரமாண்டமாகவும், தனித்துவமாகவும் கொண்டாடப்படுகிறது.