சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மீது அதிருப்தி தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான், முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு வழங்கப்படும் போது கிரிக்கெட் அழிந்துபோகும் என வருத்தம் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான், அந்த தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வியின் ((Mohsin Naqvi)) செயல்பாடுகள் குறித்து இம்ரான்கான் விமர்சித்துள்ளார். ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, அவரது சகோதரி அலீமா கான் சந்தித்துள்ளார். அப்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததற்கு, இம்ரான்கான் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்.