ஜிம்பாப்வே-க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 40 புள்ளி 1 ஓவரில் ஆட்டமிழந்து 204 ரன்களை மட்டுமே எடுத்தது.