ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 13 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15ம் ஆம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 15 ஆம் தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ள தேவஸ்தானம், 15, 16 ஆகிய தேதிகளில் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து ((சத்யா))வழங்கப்படும் என அறிவித்துள்ளது.