news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மு.க.ஸ்டாலின், விஜய், சீமான், ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்
tv

Also Watch

tv

Read this

மு.க.ஸ்டாலின், விஜய், சீமான், ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்

அதிரும் தேர்தல் களம், வாக்காள பெருமக்களே... தேர்தல் 2026

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல்நாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அதேநேரத்திலேயே, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் காரைக்குடியில் போட்டியிட தனது தாய் மற்றும் மனைவியுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். 3 முதலமைச்சர் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தேர்தல் குறித்து தங்கள் கருத்துக்களை அவரவர் பாணியில் பதிவு செய்துள்ளனர்.

தேர்தல்2026 - நான்கு முனை போட்டி
வழக்கமான தேர்தலைவிட வரும் சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவும் என்பதால், அரசியல் களமே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கிட்டத்தட்ட வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாகப் போட்டியிடும் முதலமைச்சர், செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்து, தேர்தல் நடத்தும் அதிகாரியான எஸ்.சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது,அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோட்டையில் கர்ஜிப்பேன்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக நிற்கக்கூடிய தன்னை கொளத்தூர் மக்கள் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் எனக் கூறினார். மேலும், ”முத்துவேல் கருணாநிதி எனும் நான்” என்று கோட்டையில் கர்ஜிப்பேன் என்றும் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள், திமுக மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.தொடர்ந்து, மக்களை பார்த்து கைகளை அசைத்தபடியே திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், கொளத்தூர் தொகுதியில் தனது 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் புத்தகத்தை வெளியிட்டதோடு அந்த புத்தகத்தை அங்குள்ள மக்களுக்கும் வழங்கினார்.

பெரம்பூரில் விஜய்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்த அதேநேரத்திலேயே, சில நொடிகள்கூட மாறாமல் பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் களம் காணும் நிலையில், முதலில் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் தேர்தல் அலுவலர் கீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விஜய்யின் காரை மக்கள் கூட்டம், எறும்புபோல் மொய்த்தது. வீட்டிலிருந்து கிளம்பியது முதல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே நுழைந்தது வரை மக்கள் வெள்ளம் கண்ணையும், மனதையும் குளிர வைக்க அந்த வைபிலேயே பிரச்சாரம் மேற்கொண்டார் விஜய்.

காதுகளில் விசில் ஊதி அனுப்புங்கள்
பெரம்பூர் தான் தனது தாய்வீடு, அதனால் தான் தாய்வீட்டு வாசலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக கூறிய விஜய், வண்டி வண்டியாக திமுகவினர் வைத்திருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களது காதுகளில் விசிலை ஊதி அனுப்புங்கள் எனவும் தவெகவுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்குமாறும் பேசினார்.

காரைக்குடியில் சீமான்
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பார் சீமான், தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி கயல்விழி மற்றும் தாய் அன்னம்மாளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல், மாற்றுவேட்பாளராக கயல்விழியும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுக்கும் 8,000 ரூபாய் டோக்கனை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாமா? இழந்த மானத்தை வாங்க முடியுமா? வெட்டி விற்ற மலையை வாங்க முடியுமா? அல்லது அள்ளி விற்ற மணலை தான் வாங்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டுமா? அல்லது மாதம் ரூபாய் 4 ஆயிரம் வழங்க வேண்டுமா? என்று விஜயின் வாக்குறுதியை சாடிய சீமான், கொலை செய்ய விரும்பினால் அந்த உணர்வுக்கு மதிப்பு கொடுத்து கொலை செய்ய அனுமதிக்கலாமா? அதுபோன்றுதான் மது விற்க அனுமதி வழங்கப்படுவது என தமிழக அரசை விமர்சனம் செய்தார்.

மூன்று முதல்வர் வேட்பாளர்கள்...
இவ்வாறு, 3 முதலமைச்சர் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல்நாளே ஆர்வமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்து, வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பரப்புரையிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல இறங்கி அடித்துர தேர்தல் களத்தை தெறிக்கவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
ஆபரண தங்கத்தின் விலை சரிவு

ஆபரண தங்கத்தின் விலை சரிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
2 hrs 54 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved