காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பாஜகவுக்காக வேலை பார்க்கும் தலைவர்களையும், தொண்டர்களையும் களை எடுக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். குஜராத்தில் பயணம் செய்த அவர், காங்கிரஸ் கட்சி தனது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பதால், குஜராத் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை என்று தெரிவித்தார்.