தனியார்மயமாக்கல் மற்றும் நிதியுதவிகளின் மூலம் தரமான கல்வியை தர முடியாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, உயர்கல்வியை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, ஒரு நாடு தனது மக்களுக்கு தரமான கல்வியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என பதிலளித்தார். தனியார்மயமாக்கல் மூலம் அதனை தர முடியாது என்றும், நம் நாட்டில் சிறந்தது அரசு நிறுவனங்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நம் நாட்டின் கல்வி முறை மாணவர்களின் கற்பனையை செழிக்க அனுமதிப்பதாக, தான் கருதவில்லை என்றும் ராகுல் கூறினார்.