பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் டி-20 உலகக் கோப்பையை வென்ற பெருமைமிக்க பார்வையற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கௌரவிக்கும் வாய்ப்பைப் பெற்றேன் எனவும், அவர்களின் வரலாற்று வெற்றி, தைரியம் மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கான சக்திவாய்ந்த செய்தியாகும் எனவும், இந்திய மகளிர் அணியின் மன உறுதி, ஒழுக்கம் மற்றும் அசாதாரண ஊக்கம் முழு நாட்டுக்குமான ஒரு உத்வேகம் என்றும், தெரிவித்துள்ளார்.