சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, ஜப்பான் கூடுதல் ஒத்துழைப்பை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக வாஷிங்டன் சென்ற ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு, அதிபர் டிரம்ப் உற்சாக வரவேற்பு அளித்து விருந்தளித்தார். தொடர்ந்து, இருநாட்டு நட்புறவு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.