news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஐபிஎல்2026 சென்னையை அதிர்ச்சியடைய செய்த ஹைதராபாத் அணி
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல்2026 சென்னையை அதிர்ச்சியடைய செய்த ஹைதராபாத் அணி

பிளேஆஃப் நம்பிக்கையை பலப்படுத்திய SRH

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னையை அதிர்ச்சியடைய செய்த ஹைதராபாத் அணி

ஐபிஎல் போட்டிகளில், Chennai Super Kings மீண்டும் தோல்வி அடைந்து உள்ளதால், புள்ளிப்பட்டியலில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில்...
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பரபரப்பான IPL போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முக்கிய வெற்றியை பதிவு செய்தது. 181 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத், 19 ஓவர்களில் இலக்கை எட்டியது. இஷான் கிஷன் 70 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

20 ஓவர்களில் 180/7
இந்த முக்கிய IPL லீக் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் தடுமாறிய சென்னை அணியை டெவால்ட் பிரேவிஸ் மற்றும் கார்த்திக் ஷர்மா இணை மீட்டெடுத்தது. டெவால்ட் பிரேவிஸ் 44 ரன்களும், கார்த்திக் ஷர்மா 32 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக 27 ரன்கள் சேர்த்ததால் சென்னை அணி 20 ஓவர்களில் 180/7 என்ற சவாலான ஸ்கோரை பதிவு செய்தது. ஹைதராபாத் தரப்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார். சாகிப் ஹுசைன் மற்றும் ஈஷான் மலிங்கா தலா 2 மற்றும் 1 விக்கெட் எடுத்தனர்.

சிதறடித்த ஹைதராபாத்
181 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா வேகமான தொடக்கம் கொடுத்தார். அதன்பின் இஷான் கிஷன் மற்றும் ஹெய்ன்ரிக் கிளாசன் இணைந்து சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இஷான் கிஷன் 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். கிளாசன் 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் சாமரன் ரவிச்சந்திரன் மற்றும் சாயில் அரோரா அமைதியாக ஆடி அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர். சென்னை அணிக்காக முகேஷ் சௌத்ரி 2 விக்கெட் எடுத்தார். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததால் சென்னை அணிக்கு தோல்வி ஏற்பட்டது.

புள்ளி பட்டியலில்...
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி பிளேஆஃப் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. அதேசமயம் சென்னை அணி 6ஆவது இடத்தில் இருந்து மேலும் பின்னடவை சந்தித்து உள்ளது.

Related Link
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை - சி.வி.சண்முகம்

4
39 mins agoshare
தவெக உடன் கூட்டணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved