news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்

பிளேஆஃப் போட்டி தீவிரம்

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்

ஐபிஎல் 2026, 13 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் ஆர்சிபி முன்னிலையிள் உள்ளது. குஜராத், ஹைதராபாத் அணிகள் பின்னால் நெருங்கும் நிலை உருவாகி உள்ளது.

விறுவிறுப்பில் ஐபிஎல்
இந்திய பிரீமியர் லீக்IPL 2026 தொடரின் புள்ளிப்பட்டியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 13 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் திகழ்கிறது. இதனை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் GT மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் SRH அணிகள் தலா 16 புள்ளிகளுடன் பின்தொடர்கின்றன.

சிறப்பான ஆட்டம்
இந்த சீசனில் ஆர்சிபி அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடைசி ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்றிருப்பது அந்த அணியின் தன்னம்பிக்கையை உயர்த்தி உள்ளது. +1.065 என்ற சிறந்த நெட் ரன் ரேட்டும் அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

குஜராத், சன் ரைசர்ஸ்...
இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 13 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. இதேபோல், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் பிளேஆஃப் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்...
பஞ்சாப் கிங்ஸ் PBKS அணி 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்து கடைசி பிளேஆஃப் இடத்திற்கான போட்டியில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் RR, சென்னை சூப்பர் கிங்ஸ் CSK, டெல்லி கேப்பிடல்ஸ் DC, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR அணிகளும் இன்னும் வாய்ப்பை இழக்காமல் போராடி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் MI மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG அணிகள் தலா 8 புள்ளிகளுடன் உள்ளன. இவ்விரு அணிகளுக்கும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவது கட்டாயமாகி உள்ளது.

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு
பிளேஆஃப் சுற்றை முன்னிட்டு ஒவ்வொரு போட்டியும் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இறுதி சுற்றில் எந்த நான்கு அணிகள் இடம்பிடிக்கும் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், ஐபிஎல் 2026 தொடரின் சுவாரஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Related Link
ஐபிஎல்2026 சென்னையை அதிர்ச்சியடைய செய்த ஹைதராபாத் அணி

ஐபிஎல்2026 சென்னையை அதிர்ச்சியடைய செய்த ஹைதராபாத் அணி

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக அரசின் ஊழலை சாடிய பிரபலம், தொடரும் பதிவுகள்

9
23 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau