news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு
tv

Also Watch

tv

Read this

முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு

இந்த வாரத்தில் மட்டும் ரூ.20 லட்சம் கோடியாம்...

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
today share market

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்படட்டு, சென்செக்ஸ் ஆயிரத்து 470 புள்ளிகளும், நிஃப்டி 489 புள்ளிகள் உடனும் சரிவைக் கண்டது. மும்பை பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

காலையிலேயே சரிவு
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இன்று மார்ச் 13ஆம் தேதி காலை, 75,444.22 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில், சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை குறைந்தது. வர்த்தக நேர முடிவில், பிற்பகலில், சென்செக்ஸ் 1,470.50 சுமார் 1.93% புள்ளிகள் குறைந்து 74,563.92 புள்ளிகளில் நிறைவை அடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 489, சுமார் 2.06% புள்ளிகள் குறைந்து 23,151.10 புள்ளிகளில் நின்றது. இன்று மட்டும் சுமாராக 9.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பங்குச் சந்தைகளுக்கு இதுவே மிக மோசமான வாரம் என்று பொருளாதர வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

வீழ்ச்சி அடைந்த ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆக வீழ்ச்சி அடைந்தது. தொடர்ந்து 3ஆவது வாரமாக சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி அடைந்தன. இந்த வாரத்தில் மட்டும் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

மார்ச்13 இன்று தங்கம், வெள்ளி விலை
சென்னையில், இன்று மார்ச் 13ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.
ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

Related Link
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை அறிவிப்பு

0
7 mins agoshare
திண்டுக்கல் உண்டியல் காணிக்கை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved