டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 131 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. வாகை சூடிய இந்திய அணிகடந்த மார்ச் 8ஆம் தேதி, அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 96 ரன்களில் வீழ்த்தியது. இந்த தொடர் வெற்றியின் மூலம், ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணியாக இந்திய அணி அறியப்படுகிறது. இதன் மூலம் டி-20 கிரிக்கெட் தொடரில், வெற்றிகரமான அணி என்பதை இந்திய அணி நிரூபித்து உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் அணி வீரர்கள், பயிற்சியாளர் என அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்திய அணி அபாரம் இந்த வெற்றியால், டி20 உலகக் கோப்பையை 3ஆவது முறையாக வென்ற முதல் அணி, கோப்பையை அடுத்தடுத்த தொடர்களில் தக்க வைத்துக் கொண்ட முதல் அணி, சொந்த மண்ணில் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்தது. பரிசுத்தொகை எவ்வளவு?மேலும், ரூ.131 கோடி பரிசுத் தொகை குறித்த அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த ரூ.131 கோடியில், உலக கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் ஒவ்வொருக்கும் தலா ரூ.6 கோடி கிடைக்கும். மீதமுள்ள ரூ.41 கோடி, பயிற்சியாளர் குழு மற்றும் அணியின் இதர குழுவினருக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. Related Link டி20 உலகக் கோப்பை: பல்வேறு சாதனைகள் படைத்த இந்தியா