ஹமாஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான இந்திய நாட்டை சேர்ந்த பதர் கான் சூரி, ஹமாஸுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வர்ஜீனியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.