Also Watch
Read this

சென்னையில், இன்று மார்ச் 30ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரையிலும், நிஃப்டி 300 புள்ளிகள் வரையிலும் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மார்ச்-25
ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 350 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-26
சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 9,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில் சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.320 சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,350க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிலோ வெள்ளி ரூ,2,60,000க்கு விற்பனை ஆனது.

மார்ச்-27
சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 7,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 13,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-28
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-30
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரையிலும், நிஃப்டி 300 புள்ளிகள் வரையிலும் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
25 மார்ச் - ரூ.1,08,800
26 மார்ச் - ரூ.1,06,800
27 மார்ச் - ரூ.1,07,440
28 மார்ச் - ரூ.1,09,280
30 மார்ச் - ரூ.1,08,800 இன்று
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved