மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 49.5 ஓவர்களுக்கு 338 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி, களமிறங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய அணியும் சரி சமமாக பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்தாலும், இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இதையும் பாருங்கள் - Indian Women's Team into Finals | ஆஸி. அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அதிரடி | Cricket World Cup