தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னை மீனம்பாக்கத்தில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.