இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கேரன்ஸ் புயல் தாக்கத்தால் ரியூனியன் தீவில் மணிக்கு சுமார் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதையடுத்து கனமழை விடாமல் பெய்ததால், பலபகுதிகள் வெள்ளக்காடாய் மாறின. வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.