முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது, மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாடு என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை செயல்படுத்தியது என்று பேரறிஞர் அண்ணா தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் என புகழாரம் சூட்டியுள்ள விஜய், அவரது பிறந்தநாளில் அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என தெரிவித்துள்ளார்.