தமிழ்நாட்டில், பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பரப்புரைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக, அனைத்து கட்சிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் கடிதம் அனுப்பியுள்ளார். இதையும் பாருங்கள் - பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகள் - நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம் | TN Govt | Meeting