Also Watch
Read this
Posted on: Nov 08, 2025 05:42 AM
By: Web Team

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை அரசே செலுத்தும் என்று அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இதுவரை அதற்கான நிதியை தமிழக அரசு விடுவிக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்ற பணிகளுக்கான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுவதாக கூறியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜி.எஸ்.டி. நிதியைகூட விடுவிப்பதற்கு தாமதம் ஏன்? என்று, எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி வலியுறுத்துகிறேன் என்றும் இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved