சென்னையில், இன்று செப்டம்பர் 16ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 82 ஆயிரம் ரூபாயை தொட்டு, ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயை கடந்தது. 7ஆம் தேதி 10,005 ரூபாய் என்ற விலையில் நீடித்தது. தொடர்ந்து, 8ஆம் தேதி 10,060 ரூபாய் ஆகவும், 9, 10 மற்றும் 11ஆம் தேதிகளில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10,150 ரூபாய் ஆகவும் உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 81,200 ரூபாய் ஆக இருந்தது. இடையில், பெயரளவிற்கு, சொற்ப அளவில் விலை குறைந்தது.இந்த நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் 10,280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 82,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலை (செப்.16)ஒரு கிராம் - ரூ.10,280 (ரூ.70 உயர்வு)ஒரு சவரன் - ரூ.82,240 (ரூ.560 உயர்வு)தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 144 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 1,44,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப, சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தும், அவ்வப்போது சற்று குறைந்தும் வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏற்றம் கண்டு வருகிறது. இதையும் பாருங்கள்; இதுவரை காணாத அளவுக்கு எகிறிய தங்கம் விலை | today gold price Tamilnadu | News Tamil 24x7