Also Watch
Read this
By: Web Team

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் கலவரம் வெடித்தது.
இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசினா பதவியை ராஜினா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்று நாட்டை வழிநடத்தி வரும் சூழலில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், வங்கதேசத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved