உணவுப் பாதுகாப்பு ஒரு சலுகை அல்ல, அது ஒரு அடிப்படை உரிமை என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய சோனியா காந்தி, மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்திய அவர், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமாகியுள்ளதாகவும், இதனால் சுமார் 14 கோடி தகுதியுள்ள இந்தியர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமையான சலுகைகளை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.