ஆசியாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை படைத்த விராட், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 அணிகளுக்கு எதிராக 4 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.