Also Watch
Read this
Posted on: May 23, 2025 10:34 AM
By: Srini Vasan

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை எனவும், முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றும் கூறியுள்ள அவர், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்புகள் கொடுக்கப்படும் என்றும் வாய்மொழியாக விளக்கம் அளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved