தொழிலதிபர் எலான் மஸ்க்கும் அவரது நிறுவனமும் செழிக்க வேண்டும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்காவின் செனட் சபையில் புதிய செலவு மற்றும் வரி மசோதா நிறைவேறியதை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். இதனால் கோபமடைந்த அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்திற்கு தரப்படும் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை நிறுத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார்.