Also Watch
Read this
By: Web Team

இத்தாலி கிரிக்கெட் அணி முதல் முறையாக டி20 உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
10-வது டி20உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது.
தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved