news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரே இடத்தில் கட்டணம் வசூலிப்பதால் போக்குவரத்து நெரிசல்
tv

Also Watch

tv

Read this

ஒரே இடத்தில் கட்டணம் வசூலிப்பதால் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கொடைக்கானல் போராட்டம்

சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் காத்திருப்பு :

மலைகளின் இளவரசி என அழைக்கபடும் கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை அழகினை கண்டு ரசிப்பதற்கும் தரை தளத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ஏராளமான சுற்றல் பயணிகள் வருகை புகின்றனர்.

இந்த நிலையில் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை,குணா குகை, மோயர் சதுக்கம், பைன் மர காடுகள் போன்ற பகுதிகளுக்கு செல்ல நுழைவு கட்டணம் கியூ ஆர் ஸ்கேனர்கள் மூலம் போன் பே ,கூகுள் பே, பேடிஎம் போன்ற இணையதளத்தின் வாயிலாக பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனால் அப்பகுதியில் போதிய நெட்வொர்க் போதிய அளவு கிடைக்காததால் வாகனங்கள் காத்திருந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது இதனால் விடுமுறை நாட்களில் குவியும் சுற்றுலா வாகனங்கள் கடந்து செல்ல சுமார் 1 முதல் 2 மணி நேரங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் இதற்கு முன்னதாக நடை முறையில் இருந்த அந்த அந்த சுற்றுலா தங்களில் கட்டணம் வசூலிக்கும் முறையை நடை முறை படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் வேன் ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூண்பாறை அருகே முற்றுகையிட்ட நிலையில் அதிகாரிகள் ஒரு வார கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராத காரணத்தினால் உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர்கள் ஒன்றிணைந்து தூண் பாறை அருகே இருக்கக்கூடிய வனத்துறை நுழைவாயில் பகுதியில் சுற்றுலா வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இந்த பகுதியில் வனத்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டவுடன் வாகன ஓட்டிகளும் அதிக அளவில் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கும் முறையை மாற்றி தரவில்லை என்றால் போராட்டம் கைவிடப்படாது என்று தெரிவித்த வாகன ஓட்டிகள் அனைவரும் அந்த பகுதியில் முற்றுகையிட்டு வருகின்றனர்.

குறிப்பாக இன்று மே ஒன்று மற்றும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் வனத்துறை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் காத்திருப்பதால் இந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

Related Link
ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
1 hr 11 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved