Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 09:19 AM
ஏப்ரல் 2ஆம் தேதி அன்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வதுடன், 21ஆம் தேதி அன்று கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அனல் பறக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு வெளியிடப்பட்டு உள்ள நிலையில், திமுக விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
திருவாரூரில் இருந்து...
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை திருவாரூரில் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 21ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

யார் யாருக்கு எவ்வளவு?
ஆளும் கட்சியான திமுக கூட்டணியில்
காங்கிரஸ் 28
தேமுதிக 10
விசிக 8
கம்யூனிஸ்ட்கள் தலா 5
மதிமுக 4
கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமகவுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 175 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved