Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 11:36 AM
By: Manigandan Raja

தணிக்கை குழு யு/ஏ சான்று அளிப்பு :
லெஜன்ட் சரவணனின் "லீடர்" திரைப்படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. லெஜண்ட் சரவணன் - இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்துக்கு, தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்க பணிகளை துரைராஜ் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷ் அமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved