Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 02:14 PM
By: Manigandan Raja

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் :
இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி, சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் ஏப்ரல் 9-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை நெடுந்தீவு அருகே கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved