news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் தான் போட்டி
tv

Also Watch

tv

Read this

இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் தான் போட்டி

சுந்தர்.சி திட்டவட்ட பேச்சு

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மத்திய சட்டப்பேரவை தொகுதியில், இரட்டை இலைக்கும் உதய சூரியனுக்கும் இடையே தான் போட்டி என்று, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர், நடிகர் சுந்தர்.சி தெரிவித்து உள்ளார்.

மதுரையில் சுந்தர்.சி
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில், புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், சென்னையில் சுந்தர்.சி கூறியதாவது;
மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நிச்சயம் எனக்கு வெற்றிக் கனியை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் மாதத்தில் 15 நாட்கள் எனது வாழ்க்கை மதுரையில் தான் இருக்கும் என்பதை உறுதி பட கூறுகிறேன்.

விஜய் குறித்து விமர்சனம் இல்லை
நடிகர் விஜய் என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அதேபோல நானும் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். எனது மனைவி குஷ்பு, அவரை தம்பியாக தான் கருதுகிறார். அவரும் குஷ்புவை அக்காவாக தான் பார்க்கிறார். அதனால் எந்த வகையிலும் அவரைப் பற்றி, அவரது கட்சியைப் பற்றி பேசவோ, விமர்சிக்கவோ நான் தயாராக இல்லை.

உதய சூரியன் உடன் போட்டி
ஆனால், மதுரை மத்திய தொகுதியை பொருத்தவரை இரட்டை இலைக்கும் உதய சூரியனுக்கும் இடையே தான் போட்டி. திரைப்படத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக நிறைய சாதனையை படைத்திருக்கிறேன். எனது அடுத்த கட்ட நகர்வு என்பது தேர்தல் முடிவுகளை வைத்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு சுந்தர்.சி கூறி உள்ளார்.

Related Link
நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்

6
1 hr 37 mins agoshare
eps in sivakasibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved