news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மாதர்களுக்கு டபுள் குட் நியூஸ்
tv

Also Watch

tv

Read this

மாதர்களுக்கு டபுள் குட் நியூஸ்

முதல்வருக்கு குவியும் நன்றி

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையும், கோடை கால உதவி தொகையும் என மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் காலை விடிந்ததும் வங்கி கணக்கு வந்ததால் மாதர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்கு கொடுத்த முதலமைச்சருக்கு பெண்கள் நன்றி மழை பொழிந்தனர்.

பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 வரவு
தேர்தல் காலமென்பதால் மூன்று மாதங்களுக்கு சேர்த்து 3 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையும், கூடுதலாக கோடை காலத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் தொகையும் மகளிர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதனை வரவேற்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் திமுகவினரும், மாதர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா அறிவாலயத்தில் பெண்கள் கொண்டாட்டம்

இந்நிலையில், அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சரை காண குவிந்த பெண்களும், திமுகவினரும் உற்சாகமாக கரகோஷங்களை எழுப்பி உணர்ச்சி வசப்பட்டு நன்றியை தெரிவித்தனர்.

வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், திமுகவினர் சரவெடியை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நாமக்கல், பள்ளிபாளையம், தென்காசி, தஞ்சையிலும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

நன்றி தெரிவித்த மாதர்கள்
வங்கி கணக்குகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரவு வைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மாதர்கள், அத்தொகை தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பேருதவியாக இருக்குமென உணர்ச்சி பொங்க பேசினர்.

Related Link
நாகரிகமின்றி விமர்சித்த நயினார் நாகேந்திரன்

நாகரிகமின்றி விமர்சித்த நயினார் நாகேந்திரன்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தரைப்பாலம் கட்டித்தர வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம்

0
1 hr 31 mins agoshare
தர்மபுரி தேர்தல் புறக்கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved