news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தரைப்பாலம் கட்டித்தர வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

தரைப்பாலம் கட்டித்தர வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம்

தருமபுரி, முத்துப்பட்டி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தர்மபுரி தேர்தல் புறக்கணிப்பு

கிராமத்தினர் போராட்டம் : 

பெங்களூரு- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை தருமபுரி அடுத்த முத்துப்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள மாரியம்மன் கோயில் கொட்டாய், கொளகத்தூர், பழைய தருமபுரி, பாறை கொட்டாய், ரங்கப்பன் கொட்டாய் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குண்டல்பட்டி பிரிவு சாலையை கடந்து செல்ல வேண்டிய சூழலில் இருந்து வருகிறது. இப்பகுதி பொதுமக்கள்

ஈடுகாடுக்கு செல்ல வேண்டுமென்றால் சாலையை கடக்க வேண்டும் மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டு காலமாக இப்பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு துறை
அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுவதாகவும் மக்கள் கடந்து செல்ல சிறிய தரைப்பாலம் கேட்டு 300-க்கும் மேற்பட்ட கிராம
மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி சாலை மறியல் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
கொள்முதல் நிலையம் செயல்படவில்லை என விவசாயிகள் புகார்

கொள்முதல் நிலையம் செயல்படவில்லை என விவசாயிகள் புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தரைப்பாலம் கட்டித்தர வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம்

1
3 hrs 40 mins agoshare
தர்மபுரி தேர்தல் புறக்கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved